சிறுதானியங்களின்
அரசன் கம்பு
கம்பு
சிறுதானியங்களில் அதிகமாக பயிரிடப்படுவது ஆகும். தமிழகத்திலும், இந்திய அளவிலும் மக்களால் அதிகமாக அறியப்பட்ட சிறுதானியம் ஆகும். சுமார்
நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கம்பு பயிரிடப்படுகிறது. நமது இந்திய மக்களால் 2000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே கம்பு உணவில்
பயன்படுத்தப்படுகிறது. வெயில் அதிகமாக உள்ள காலங்களில் சென்னை, கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களிலும், சிறிய நகரங்களிலும், ரோட்டோரத்தில்
உள்ள தள்ளுவண்டிக் கடைகளில், கம்மங்கூழை
இன்றைய இளம் தலைமுறையினர் ரசித்து ருசித்து குடிப்பதை நாம் பார்த்திருப்போம். நாம்
எப்போதாவது குடிக்கும் இந்த கம்மங்கூழ் ஒரு காலத்தில் நமது கிராமங்களின் பிரதான
உணவாக இருந்தது. குறிப்பாக விவசாயிகளின் தவிர்க்க முடியாத உணவாக கம்பு
விளங்கியிருக்கிறது.
கம்பு
கணக்கிலடங்கா மருத்துவ பயன்களை மனிதனுக்கு தருகிறது. கனிமம், கால்சியம், புரதம், இரும்புச்சத்து என பல வகையான சத்துக்களை
கொண்டது. இதை கம்பு சோறு, கம்மங்கூழ்,
கம்மங்களி, கம்பு தோசை, வெள்ளம் மற்றும் கருப்பட்டி கலந்து கம்பினால்
செய்த பலகாரங்கள் என்று எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். தினமும் காலையில்
கம்பால் செய்த உணவுகளை சாப்பிட்டால் நமது உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை
தடுத்து நம் உடல் நலத்தை காக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் அரிசிக்கு பதிலாக
கம்பு சோறு, கம்மங்கூழ்
போன்றவற்றை சாப்பிடலாம். கம்பைத் தொடர்ந்து சாப்பிடுவதால் அதிக நோய் எதிர்ப்பு
சக்தியை நமது உடல் பெறுகின்றது. நமது குழந்தைகளுக்கு கம்பால் செய்த பலகாரங்களையும்,
உணவுகளையும் கொடுப்பதால்
அவர்கள் ஆரோக்கியம் மேம்படும். செரிமான பிரச்சனையை நீக்கவும், உடல் எடையை சீராக வைப்பதற்கும் கம்பு
உதவுகிறது. மோசமான உணவுகளால் குடல் புற்று சமீப காலமாக அதிகம் காணப்படுகிறது.
கம்பு சார்ந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் குடல் புற்று வருவதற்கான வாய்ப்பு
தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெயில் காலங்களிலும், உடல் வெப்பத்தினால் அவதிப்படுவோர்களும்
கம்பைத் தாராளமாக நிறைய எடுத்துக்
கொள்ளலாம். அதனால் நாம் " சிறுதானியங்களின்
அரசன் கம்பு " என்று அழைக்கும் அளவுக்கு மனிதனுக்கு ஏராளமான பயன்களைத்
தருகிறது.
நமது முன்னோர்கள் அதிக சத்துக்களைக் கொண்ட உணவுகளையே
தேர்ந்தெடுத்து " உணவே மருந்து " என்ற அடிப்படையில் தமது அன்றாட வாழ்வில்
பயன்படுத்தியிருக்கின்றனர். கம்பு போன்ற மிகச் சிறப்பான சிறுதானியங்களை
பயன்படுத்தியதால் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவர்களாகவும், உடல் வலிமை பெற்றவர்களாகவும்
விளங்கியிருக்கின்றனர் அக்காலத்தில். நாமும் நமது முன்னோர்களாகிய பழந்தமிழர்களைப்
பின்பற்றி கம்பு போன்ற அதிக நன்மை செய்யும் சிறுதானியங்களை அன்றாட வாழ்வில்
உபயோகித்து அதிக பலன்களைப் பெற்றிடுவோம்.

Millets, especially kambu (Tamil word) is useful in building stamina, and was used as a wholesome food for centuries, till rice replaced it in the mid 20th centuries. Even now kambu is consumed in cold places surrounding Hosur, hilly areas , especially in southern states. Millets are the order of day.
ReplyDelete