இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது முன்னோர்கள்
இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் உச்சம் பெற்றுள்ளன. மனித இனம் கற்பனை செய்து பார்க்க முடியாத வசதிகளை பெற்றுள்ளது இன்று. இந்தியாவை விட பல மடங்கு முன்னேறியுள்ள மேலை நாடுகளில் கூட தமிழர்களின் கலாச்சாரங்களையும், உணவு முறைகளையும் வியந்து பார்க்கின்றனர். நமது முன்னோர்களின் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்கை முறை தான் இதற்கு முக்கிய கரணம் ஆகும்.
நமது முன்னோர்கள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, வேப்பங்குச்சியால் பல் துலக்கி, ஒரு செம்பு மண்பானைத் தண்ணீர் குடித்து, காலை கடன்களை முடித்து, தான் வளர்க்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் மற்றும் உணவளித்து, வீட்டுத் தேவைக்கு மாட்டிலிருந்து பால் கறந்து, கம்பங்கூழ் அல்லது கேழ்வரகுக் கூழோ குடித்து, தங்களுடைய விவசாய வேலைகளைப் பார்க்க சென்று விடுவார்கள். அயராது உழைப்பதற்கும், சுறுசுறுப்பிற்கும் பழந்தமிழர்கள் பெயர் பெற்றவர்கள்.
நமது முன்னோர்கள் இயற்கையாக கிடைத்ததை மட்டுமே மண்ணுக்கு உரமாக்கி விவசாயம் செய்தனர் அக்காலத்தில். அதனால் அம்மண்ணிலிருந்து அவர்களுக்கு கிடைத்த தானியங்களும், காய்கறிகளும், அளவில்லாத ஆரோக்கியத்தை கொடுத்தன. பழந்தமிழர்கள் வீட்டு வாசலில் வேப்ப மரங்களை நடுதல், மாட்டுச்சாணத்தை வைத்து வீட்டையும், முற்றத்தையும் சுத்தப்படுத்துதல், கிருமி நாசினியாக மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்தல், பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து சுத்தமான மஞ்சள் அரைத்து குளித்தல், கருப்பட்டி, துளசி, இஞ்சி கலந்து கருப்பட்டி காபி குடித்தல், குழந்தைகளுக்கு சுகாதாரமான பசும்பால் கொடுத்தல், அதிக சத்துள்ள சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது போன்ற நல்ல வாழ்கை முறைகளோடு, இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காரணத்தால் உடல் வலிமையும், அதிக நோய் எதிர்ப்பு சக்தியும் பெற்றுறிருந்தனர்.
இவ்வளவு மருத்துவ மற்றும் தொழில்நுட்ப வசதிகள் உச்சம் பெற்றிருக்கும் காலத்தில் கூட மனித இனத்தை கொரோனா வைரஸ், சார்ஸ் வைரஸ், நிபா வைரஸ் என்று பல விதமான வைரஸ்கள் பயந்து நடுங்க வைக்கின்றன. அன்றைய காலகட்டத்திலும் மோசமான வைரஸ்களும், அச்சுறுத்தும் பாக்டீரியாக்களும் இருக்கவே செய்தன. ஆனால் நமது முன்னோர்களின் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகளும், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களும், உடலை ஆரோக்கியமாக வைத்திருந்ததுடன் மட்டுமல்லாமல் அதிக நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிருந்தனர் அக்காலத்தில்.
இவ்வளவு சிறப்பான வாழ்வியல் முறைகளையும், ''உணவே மருந்து'' எனும் உணவுப் பழக்கங்களையும் பின்பற்றியதால் தான் நாம் மட்டுமல்ல, மேலை நாட்டினரும், உலகிற்கே எடுத்துக்காட்டாகவும், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது முன்னோர்களையும் பற்றி வியந்து போற்றுகின்றனர்.
இவ்வளவு சிறப்பான வாழ்வியல் முறைகளையும், ''உணவே மருந்து'' எனும் உணவுப் பழக்கங்களையும் பின்பற்றியதால் தான் நாம் மட்டுமல்ல, மேலை நாட்டினரும், உலகிற்கே எடுத்துக்காட்டாகவும், இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது முன்னோர்களையும் பற்றி வியந்து போற்றுகின்றனர்.


